நாயை பிடிக்க வந்த சிறுத்தை: சப்தமிட்டு விரட்டிய பெண்

கூடலுார்; கூடலுார் அருகே, நள்ளிரவில் வீட்டின் வெளியே கட்டிருந்த நாயை பிடிக்க வந்த சிறுத்தையை, சப்தமிட்டு பெண் விரட்டி உள்ளார்.

நீலகிரி மாவட்டம், கூடலுார், கோழிப்பாலம் அருகே உள்ள சேப்பட்டி கிராமத்தை சேர்ந்த, விஜயகுமாரி என்ற பெண், தன் வளர்ப்பு நாயை வீட்டின் வெளியே கட்டி வைத்துள்ளார். நள்ளிரவு, 12:30 மணிக்கு, அப்பகுதியில் நுழைந்த சிறுத்தை, நாயை பிடித்து செல்ல முயன்றது.

நாயின் சப்தம் கேட்டு, கதவை திறந்து வெளியே வந்த விஜயகுமாரி சிறுத்தையை நோக்கி சப்தமிட்டுள்ளார். அவரின் சப்தம் கேட்டு சிறுத்தை நாயை விட்டுசென்றது. நாய் உயிர் தப்பியது.

Advertisement