கவனமாக பேசுங்கள் ஸ்டோக்ஸ் * அஷ்வின் பதிலடி

புதுடில்லி: ''எதையும் நன்கு யோசித்து, கவனமாக பேச வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் உடனே எதிர்வினை கிடைத்து விடும்,'' என அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து மோதிய நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. இதில் கால்விரல் எலும்பு முறிவுடன் பேட்டிங் செய்தார் இந்தியாவின் ரிஷாப் பன்ட். இதுகுறித்து பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,'' டெஸ்டில் காயமடைந்த வீரருக்குப் பதில், மாற்று வீரர் களமிறங்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதில் தந்த இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், ''காம்பிர் கருத்து முற்றிலும் கேலிக்கு உரியது,'' என்றார்.
அடுத்து நடந்த ஐந்தாவது டெஸ்டில் தோள்பட்டையில் காயம் அடைந்தார் வோக்ஸ். வேறு வழியில்லாத நிலையில் கையை கட்டிக் கொண்டு, ஒரு கையுடன் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியது:
'நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதைத் தான் அறுவடை செய்கிறீர்கள்' என்பர். இதுபோல, நீங்கள் செய்த செயலுக்கு உடனே எதிர்வினை கிடைத்து விடும். இது தான் விதி.
ஸ்டோக்சின் கிரிக்கெட் திறமைக்கு நான் ரசிகன். ஆனால், அவர், எதையும் யோசித்து, கவனமாக பேச வேண்டும். தனது அணியின் வெற்றிக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார் வோக்ஸ். அட்கின்சனுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுத்து, அணியை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு சென்றார். காயமடைந்த போதும், அணிக்காக களமிறங்கிய, வியக்கத்தக்க போராட்ட குணத்திற்கு வாழ்த்துகள்.
'வீரர்கள் காயமடையும் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,' என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்தார். இதுபோல மாற்று வீரர்களை அனுமதிக்க வேண்டும். ரிஷாப் போன்ற வீரர் தனது அணிக்காக விளையாடும் போது, காயமடைந்தால் எப்படி இருக்கும் என ஸ்டோக்ஸ் யோசித்து இருக்க வேண்டும்.
மாற்று வீரர் தேவையில்லை, இது நல்லதல்ல என்றால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். மாறாக, இதுபோன்ற 'நகைச்சுவை', 'கேலி' என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது மரியாதைக்கு உரிய செயல் அல்ல. விதி வலியது. எதையும் நன்றாக யோசித்து பேசுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
-
உத்தராகண்ட் வெள்ளத்தில் 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்: ராணுவம்
-
குத்துச்சண்டை கூட்டமைப்பின் அதிகாரியின் அவமானகரமான நடத்தை; மனம் நொந்து உண்மையை உடைத்த வீராங்கனை லவ்லினா
-
பசியில் புறாக்கள்,பதற்றத்தில் மும்பை...