இந்திய பெண்கள் அணி 'டிரா' * ஆசிய கோப்பை கால்பந்தில்...

யங்கான்: இந்தியா, இந்தோனேஷிய பெண்கள் (20 வயது) அணிகள் மோதிய ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட) ஆசிய கோப்பை (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று நேற்று மியான்மரில் துவங்கியது. மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய பெண்கள் அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் 8 அணிகள், புள்ளிகளுக்கு ஏற்ப, தரவரிசையில் 'டாப்-3' இடம் பெறும் 3 அணிகள், பிரதான தொடருக்கு தகுதி பெறும்.
கடந்த 2024 தகுதிச்சுற்றில் கோல் அடிப்படையில் பின்தங்கிய இந்தியா, முதல் சுற்றுடன் திரும்பியது. நேற்று, இந்திய அணி தனது முதல் போட்டியில் இந்தோனேஷியாவை சந்தித்தது. கடந்த முறை 6-0 என வென்ற இந்தியா, இம்முறை கோல் அடிக்க திணறியது. கடைசி வரை போராடிய போதும். இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில் போட்டி 0-0 என 'டிரா' ஆனது.
நாளை தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, துர்க்மெனிஸ்தானை சந்திக்க உள்ளது.
மேலும்
-
ஹமாஸ் உடன் போரின் முதன்மை நோக்கங்கள் என்ன? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொல்வது இதுதான்!
-
ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி