பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: 'பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு சீர்கேடுகளை கண்டித்து, வரும் 13ம் தேதி, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டும், காணாமலும் இருந்து வரும், தி.மு.க., அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை, உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில், வரும் 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இதில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement