ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
கோவை; வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும், 8ம் தேதி மேட்டுப்பாளையம் - போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66615/66616) ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - கோவை(12675), சென்னை சென்ட்ரல் - கோவை(12243) சதாப்தி ரயில்கள் இருகூர் - போத்தனுார் ரயில்பாதையில் இயக்கப்படும்.
அதேபோல், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(12678) கோவை ரயில்வே ஸ்டேஷன் வராமல் இருகூர் - போத்தனுார் ரயில் பாதை வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனுாரில் மதியம் 12:47 மணிக்கு நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement