இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து

11

பிஜிங்: 'இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்' என இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்ததற்காக டிரம்பை சீன துாதர் சாடி உள்ளார்.


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு, அபராத வரி விதிப்பு செய்யப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதன்படி இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலுக்கும் வேறு சில காரணங்களை கூறி, 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடி சீனாவுக்கும் வரி விதிப்பதாக டிரம்ப் கூறி வருகிறார்.


இது தொடர்பாக, நமது நாட்டுக்காக சீனத் தூதர் சூ பீஹாங் வெளியிட்டுள்ள பதிவில், பிரேசில் அதிபரின் தலைமை ஆலோசகருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தொலைபேசியில் உரையாடினார் என்று தெரிவித்துள்ளார்.


சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், 'மற்ற நாடுகளை அடக்குவதற்கு வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். உலக வர்த்தக அமைப்பின் விதிகளை பலவீனப்படுத்துகிறது. இந்த அணுகு முறையை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை பகிர்ந்த இந்தியாவுக்கான சீன தூதர் சூ பீஹாங், 'இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்' என பெயர் குறிப்பிடாமல் டிரம்பை விமர்சித்து உள்ளார்.

Advertisement