நாமக்கல் மாவட்ட வடக்கு ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு



நாமக்கல், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றிய முருகேசன், நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தையும், அவர் கூடுதலாக கவனித்து வந்தார்.


இந்நிலையில், ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர், நேற்று நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பேற்றார்.

Advertisement