விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: விபத்து மரணமாக பதிவு செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் புதிய கோவிந்தபுரத்தை சேர்ந்த சரத்குமார் சென்ற கார் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆற்றுப்பாலத்தில் விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, கார் உரிமையாளர் சரத்குமார் மற்றும் காரை ஓட்டிய டிரைவர் சாரதி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக,சரத்குமாரிடம் கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ், விபத்து மரணம் என சிஎஸ்ஆரில் பதிவு செய்ய, ரூ.10,000 தர வேண்டும் என்றும், முதல் தவணையாக ரூ.5000 மும், 2வது தவணையாக ரூ.2000 மும் வாங்கிய நிலையில் மீதமுள்ள தொகையான ரூ.3000த்தை கட்டாயமாக கொடுக்கும்படி பேரம் பேசிய வீடியோ வெளியான நிலையில், கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ கோவிந்தராஜை இன்று சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்
-
ஆத்தூர் நகைக்கடையில் துணிகர கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் வந்தவர்களை விரட்டிப் பிடித்த மக்கள்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
ஆகஸ்ட் மாத பவுர்ணமிக்கு இன்னொரு பெயர் மீன் நிலவு!
-
விலகுகிறாரா சஞ்சு சாம்சன்: ராஜஸ்தான் அணியில் இருந்து
-
மைசூருவில் மகாராஜா டிராபி
-
நியூசிலாந்து அணி அபாரம்: 125 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே