உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் 66 முகாமில் 33,511 மனுக்கள் அளிப்பு

நாமக்கல், மாவட்டத்தில் நடந்து வரும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், இதுவரை நடந்துள்ள, 66 முகாமில், 33,511 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், கடந்த, 15ல் தொடங்கி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மொத்தம், 238 சிறப்பு முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் முகாம்களில், அரசின் சேவைகளை கேட்டு பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தை, பொறுத்தவரை, கடந்த, 4 வரை, 66 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், பட்டியலிடப்பட்ட சேவைகளை கேட்டு, 21,194 விண்ணப்பங்கள், இதர சேவைகள் கேட்டு, 12,317 விண்ணப்பங்கள் என மொத்தம், 33,511 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை, மின் வாரியம் மூலம் பெயர் மாற்றம், வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றம், தொழிலாளர் நலவாரிய அட்டை புதுப்பித்தல், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை, 1,000க்கும் மேற்பட்டோருக்கு அரசின் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement