ஆத்துப்பாளையம் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

கரூர், ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, நொய்யல் பாசன வாய்க்காலில், நேற்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணையில் இருந்து கடந்த ஜூலை, 16ல் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 31ல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 16.74 அடியாக இருந்தது. இதனால், ஐந்து நாட்களுக்கு பிறகு, நேற்று காலை நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 88 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 15 ஆயிரத்து, 378 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 17 ஆயிரத்து, 888 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக காவிரியாற்றில், 16 ஆயிரத்து, 518 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 600 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட் டது.
* கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) அரவக்குறிச்சி, 11.40, அணைப்பாளையம், 5, க.பரமத்தி, 17.40, தோகைமலை, 5, பஞ்சப்பட்டி, 25, கடவூர், 5, பாலவிடுதி, 8, மயிலம்பட்டி, 12 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 7.40 மி.மீ., மழை பதிவானது.

Advertisement