புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் ஆய்வு

கரூர், புகழூர் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் ஆய்வு செய்தார்.கரூர் மாவட்டம், புகழூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. அதில், தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், துணை அழைப்பு விபரம், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியதன் விபரம், தீயணைப்பு கருவிகள் மற்றும் வாகனங்களின் தரம் ஆகியவற்றை, நேற்று மாவட்ட அலுவலர் வடிவேல் ஆய்வு செய்து விளக்கம் கேட்டறிந்தார்.

பிறகு, தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, புகழூர் நிலை ய தீயணைப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட, தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.

Advertisement