அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி ஏஜென்டுகள் ஆலோசனை கூட்டம்

கரூர், கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடி ஏஜென்டுகள் ஆலோசனை கூட்டம், வேலாயுதம்பாளையத்தில் நடந்தது.

அதில், சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி ஏஜென்டுகளின் பணிகள், கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் துண்டு பிரசுரமாக வழங்குதல், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க., ஆட்சி கால திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி பிரசாரம் செய்தல் ஆகியவை குறித்து, கரூர் மாவட்ட அ.தி. மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், புகழூர் நகர செயலர் விவேகானந்தன், ஒன்றிய செயலர் கமல கண்ணன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement