உழவர் சந்தை எதிரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள்

கரூர், உழவர் சந்தை முன்புறம், கடை அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உழவர் சந்தை செயல்படுகிறது. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், உழவர் சந்தைக்கு தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், உழவர் சந்தைக்கு போட்டியாக, அங்குள்ள சாலையோரங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.


உழவர்சந்தை எதிரில் அதிகாலையிலேயே, வியாபாரிகள் காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வந்து இறக்குவதால் உழவர்சந்தை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி வாகனங்களும் நெரிசலில் சிக்கி தாமதமாகவே செல்கின்றன.
வெளியூர் வியாபாரிகள், காமராஜ் மார்க்கெட்டிற்கு தான் வாகனங்களை கொண்டு சென்று காய்கறிகளை இறக்க வேண்டும். உழவர்சந்தை எதிரே வாகனங்களை நிறுத்துவது, கடைகளை போட்டு விற்பனை செய்வது கூடாது. எனவே, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement