புகழூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஹாக்கி போட்டி
கரூர், கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், குறுவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் விஜயன் போட்டிகளை தொடங்கி வைத்தார். 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், நடையனுார் அரங்கசாமி கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.
அதில், 1-0 என்ற புள்ளிக்கணக்கில் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
அதேபோல், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியிலும், புகழூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அணி, பசுபதிபாளையம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி அணியை, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கரூர் ஹாஸ்ட் அரிமா சங்க தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் சுப்பிரமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் மகேந்திரன், நிர்மலாதேவி, ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
-
உத்தராகண்ட் வெள்ளத்தில் 70 பேர் மீட்பு; 50 பேர் மாயம்: ராணுவம்