இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி 14 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் சாதனை

சென்னை,:''பதினான்கு ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., ஆட்சியில், தமிழகம் மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொறியாளர், இளநிலை பொறியாளர் உட்பட, பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது.
இதில், பணி நியமன ஆணைகள் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது, நாம் கணித்ததை விட, இது, 2.2 சதவீதம் அதிகம்.
க டந்த 2010 - 2011ல், கருணாநிதி முதல்வராக இருந்த போது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 13.12 சதவீதமாக இருந்தது. 14 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. நாட்டிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக, தமிழகம் திகழ்கிறது.
இது, தனிப்பட்ட ஸ்டாலின் வெற்றி அல்ல; நம் அனைவரின் உழைப்புக்கும் கிடைத்த கூட்டு வெற்றி. இளைஞர்கள் தான் இந்த நாட்டின் அடித்தளம். இளைஞர்கள்- முன்னேற வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது தான், நம் அரசின் முதன்மை பணி.
அதனால் தான், பல்வேறு திட்டங்களின் வழியாக பயிற்சிகளை வழங்கி வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில், தேர்வாணையம், நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, 1.8 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அதேபோல, திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம், 'நான் முதல்வன்' திட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலாக, 6.41 லட்சம் பேர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நியமனங்கள் பெற்றுள்ளனர்.
பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கும், 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கும் தமிழகம் முக்கிய மையமாக உள்ளது.
தி.மு.க., அரசு பொறுப் பேற்றதில் இருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் என, பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் செய்த, 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 10.63 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இதனால், 2 லட்சத்து 30,856 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்து உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி:
மாநில அரசின் நிதி நிலைமையை, நாம் சரியாக கையாண்டு இருக்கிறோம். பொருளாதாரத்தை, உயர்த்தி இருக்கிறோம். கடன் வாங்குவதாக, குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஆனால், வரைமுறைகளுக்கு உட்பட்டு, முதலீடுகளுக்காக நாம் வாங்குகின்ற கடன்கள், தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது.
மத்திய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், முதல்வரின் கூர்மதி வழிகாட்டுதலால், இந்த வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்