கொலை செய்யப்பட்ட வக்கீல் உடலுக்கு இறுதி மரியாதை
தாராபுரம், தாராபுரத்தில், கொலை செய்யப்பட்ட வக்கீல் உடல், நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த ஜூலை 28ல், உயர்நீதிமன்ற வக்கீல் முருகானந்தம், 41, நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, முருகானந்தத்தின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீதிமன்ற வலியுறுத்தலின்படி, நேற்று முருகானந்தத்தின் உடலை, உறவினர்கள் பெற்று, தாராபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரது உடலுக்கு, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அமராவதி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும்
-
ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: பிரதமர் மோடி, நட்டாவுக்கு அதிகாரம்
-
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்; அமெரிக்க வரி விதிப்பு பற்றி சீன துாதர் கருத்து
-
பிரதமர் மோடியுடன் கமல் சந்திப்பு
-
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
-
விபத்து மரணமாக பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம்: கலசப்பாக்கம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்