இரு அமைப்புகள் மீது ஆறு வழக்கு பதிவு

ஈரோடு, தீரன் சின்னமலை நினைவு தினத்தன்று, விதிமுறைகளை மீறியதாக இரு அமைப்புகள் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீரன் சின்னமலை நினைவு தினம் கடந்த, 3ல் அரச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் கடைபிடிக்கப்பட்டது.


போக்குவரத்து விதிமுறை மீறல், பொது இடத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பாக, ஏற்கனவே எட்டு அமைப்புகள் மீது, 16 வழக்குகள் போலீசாரால் பதியப்பட்டது. இதில் நேற்று முன்தினம் மேலும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை (யுவராஜ்) மீது மூன்று, கொ.ம.தே.க., மீது மூன்று என மொத்தம், ஆறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

Advertisement