பங்கு சந்தை நிலவரம் : சரிவில் துவங்கி உயர்வில் நிறைவு

சரிவில் துவங்கி உயர்வில் நிறைவு
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் லேசான உயர்வுடன் முடிவடைந்தன. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது, தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை காரணமாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.
தொடர்ந்து அமெரிக்க வரி விதிப்பின் எதிர்மறை தாக்கத்தால், பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றனர். நேற்று பிற்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 926 புள்ளிகள் வரை சரிவை கண்டன. வர்த்தகம் முடியவிருந்த கடைசி மணி நேரத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவே, நிப்டி, சென்செக்ஸ் ஏற்றம் கண்டன. இதனால், கடந்த இரண்டு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.
உலக சந்தைகள்
புதனன்று அமெரிக்கச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1 ஆசிய சந்தைகளில் சாதகமான சூழல் நிலவியது
2கடைசி மணி நேரத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியது
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 4,997 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.72 சதவீதம் அதிகரித்து,
67.37 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்து, 87.58 ரூபாயாக இருந்தது.
மேலும்
-
கன்னியக்கோவிலில் இன்று தீமிதி விழா புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
-
'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது
-
பெண்ணிடம் அத்துமீறிய கடை உரிமையாளர் பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
-
பைக்குகள் மோதல் ரேஷன்கடை ஊழியர் பலி
-
திருகோவிலுாருக்கு வரும் 29ம் தேதி பழனிசாமி வருகை : மாவட்ட செயலாளர் குமரகுரு தகவல்
-
வீணாக கடலுக்கு பாயும் காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம்