பெண்ணிடம் அத்துமீறிய கடை உரிமையாளர் பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் உர நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பு அருகே தனியார் உர நிறுவனம் இயங்கி வருகிறது. இதை, காணை கிராமத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம், 55; என்பவர் நடத்தி வருகிறார்.

நேற்று மாலை இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவரிடம், உரிமையாளர் அப்துல் ஹக்கீம் ஆபாசமாக பேசி அத்துமீறி உள்ளார். இதனால், அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.

தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து, அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 9:30 மணிக்கு அப்துல்ஹக்கீமை போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Advertisement