'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோவிலானுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலகுருநாதன், 30; முருகன்குடி கிராம வி.ஏ.ஓ., வாக உள்ளார்.

இவர், பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், பாலகுருநாதன் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement