ரூ.51 லட்சம் கோடி முதலீடு டிரம்பிடம் பணிந்தது ஆப்பிள்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலைத் தொடர்ந்து, அமெரிக்காவில் 51 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக, ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன், ஸ்மார்ட்வாட்ச் உட்பட அனைத்து பொருட்களுமே அந்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என, டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உற்பத்திக்காக வெளிநாட்டு தொழிற்சாலைகளை நம்பியிருக்கும் சிப் உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், அமெரிக்காவில் ஆலை அமைக்க தவறினால் அவற்றுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் சிப் மற்றும் செமிகண்டக்டர் இறக்குமதிக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், நேற்று முன்தினம் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை சந்தித்தார்.
மேலும்
-
கன்னியக்கோவிலில் இன்று தீமிதி விழா புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
-
'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது
-
பெண்ணிடம் அத்துமீறிய கடை உரிமையாளர் பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
-
பைக்குகள் மோதல் ரேஷன்கடை ஊழியர் பலி
-
திருகோவிலுாருக்கு வரும் 29ம் தேதி பழனிசாமி வருகை : மாவட்ட செயலாளர் குமரகுரு தகவல்
-
வீணாக கடலுக்கு பாயும் காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம்