ரயிலில் கஞ்சா கடத்தல்

பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம், மணிப்பூரைச் சேர்ந்த சிப்புசங்கர், 24, என்பவர், 4 கிலோ கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்திவந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருச்சந்துாரைச் சேர்ந்த சிவசக்தி, 20, என்பவரையும் போலீசார் கைது செய்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement