இ.பி., பில் ரூ.1,333 ஆக திருத்தம் வீட்டு உரிமையாளர் நிம்மதி
அம்பத்துார்,அம்பத்துாரில் மெத்தை வியாபாரியின் வீட்டிற்கு வந்த 91,933 ரூபாய் மின் கட்டணம், ஆய்வுக்கு பின் 1,333 ரூபாயாக மாற்றப்பட்டது.
அம்பத்துார், அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 52; மெத்தை வியாபாரி. இவரது வீட்டில், ஜூன், ஜூலை மாதங்களில் 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கான கட்டணம் 91,993 ரூபாய் என, நந்தகுமாரின் தந்தையான சுப்பிரமணி என்பவரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்து, அண்ணா நகரில் உள்ள மின் கட்டண வசூல் மையத்திற்கு சென்று, நந்தகுமார் முறையிட்டுள்ளார். கணினி கோளாறால் தவறு ஏற்பட்டிருக்கலாம் என, மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த மின் கணக்கிடும் மீட்டர், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில், ஜூன், ஜூலை மாதத்தில் 425 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்கான தொகை 1,333 ரூபாய் என, நேற்று பதிவேற்றப்பட்டது. இதனால், நந்தகுமார் நிம்மதி அடைந்தார்.
மேலும்
-
தி.மு.க.,வில் 'உள்ளடி' வேலை அமைச்சர் எச்சரிக்கை
-
முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்
-
பெண்ணிடம் ரூ. 48 லட்சம் மோசடி புதுச்சேரி ஆசாமிகள் 2 பேருக்கு வலை
-
கன்னியக்கோவிலில் இன்று தீமிதி விழா புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
-
'போக்சோ' வழக்கில் வி.ஏ.ஓ., கைது
-
பெண்ணிடம் அத்துமீறிய கடை உரிமையாளர் பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு