கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி

தஞ்சாவூர்: சுவாமிமலையில், கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி செலுத்திய தி.மு.க.,வினர் மீது, பா.ஜ.,வினர் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது.
இங்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, கோவில் முகப்பில் உள்ள கேட்டில், கருணாநிதி போட்டோவை வைத்து, தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
தகவலறிந்த பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவில் துணை ஆணையர் உமாதேவிக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கருத்துக்கள் பரவின. இதையறிந்த தி.மு.க.,வினர், சில மணி நேரத்தில், கோவில் பணியாளர்கள் முன்னிலையில், கருணாநிதி போட்டோவை அகற்றினர். இது தொடர்பாக, பா.ஜ.,வினர் சுவாமிமலை போலீசில் புகார் அளித்துள்ளனர்.






மேலும்
-
பார்க்கிங் பிரச்னை; பிரபல ஹிந்தி நடிகையின் நெருங்கிய உறவினர் கொலை
-
இந்தியாவுடன் முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை; சொல்கிறது அமெரிக்கா
-
சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?
-
டிரம்ப் தடாலடியை தாண்டி ஜெயிப்போம்; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
-
இலவச கட்டாயக்கல்வி திட்டத்தில் சிக்கல்: குழந்தைகள், பெற்றோருக்கு நெருக்கடி
-
வீணாக கடலுக்கு பாயும் காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம்