பட்டா இருந்தாலும் கட்டட அனுமதி பெற்று தான் வீடு கட்ட வேண்டும்!

பொ துவாக நிலம் வாங்க வேண்டும் அதில் நமக்கு பிடித்த மாதிரி வீடு கட்டி நிம்மதியாக வாழ வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இதற்காக அரசு வகுத்துள்ள சட்டங்கள், விதிமுறைகள் குறித்த அடிப்படை புரிதலை பெறுவதற்கு கூட பலரும் ஆர்வம் காட்டுவதில்லை.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசு வகுத்துள்ள சட்டங்கள், விதிமுறைகளை கடைப் பிடிப்பது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது. தமி ழகத்தில் ஒருவர் நிலம் வாங்கினால், அது குறித்த பத்திரத்தை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியும்.

இதன் பின் பத்திரப்பதிவு அடிப்படையில் அந்த நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சம்பந்தப்பட்ட சொத்துக்கான பட்டா நம் பெயருக்கு முறையாக மாற்றம் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதற்கு முழுமையான உரிமையாளர் ஆகிவிட்டோம், அதில் நம் விருப்பப்படி வீட்டை கட்டலாம் என்று மக்கள் நினைக்கின்றனர்.

உண்மையில் பத்திரம், பட்டா போன்ற ஆவணங்கள் உங்கள் பெயரில் தெளிவாக இருந்தாலும், நீங்கள் தன்னிச் சையாக கட்டுமான திட்டங்களை செயல் படுத்த முடியாது. அந்த நிலம், நகர், ஊரமைப்பு சட்டப்படி முறையான வீட்டு மனையாக அங்கீ கரிக்கப்பட்டு இருக்க வேண்டியது அவசியம்.

நகர், ஊரமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையாக இருந்தால் மட்டுமே நீங்கள் அதில் வீடு கட்டும் பணிகளை மேற் கொள்ள முடியும். சரி, அங்கீ கரிக்கப்பட்ட மனையாக உள்ளது என்றாலும், அதில் வீடு கட்டும் முன், முறையாக வரைபடம் தயாரித்து அந்த வரை படம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று பார்த்து ஒப்புதல் பெற வேண்டும்.

அதில் தற்போதைய நிலவரப்படி, உங்களிடம் உள்ள நிலத்தின் ஆவணங் கள், விபரங்களை கொடுத்தால் அதில் எத்தகைய வீடு கட்டலாம் என்பதை பொறி யாளர்கள் அல்லது நகரமைப்பு வல்லு னர்கள் தெரிவிப்பர். அதன் அடிப்படையிலேயே புதிய வீட்டுக்கான வரைபடத்தை தயாரிக்க முடியும்.

குறிப்பாக, ஒரு நபர், தன்னிடம், 900 சதுர அடி நிலம் இருக்கும் நிலையில், அதில் தரை தளம், முதல் தளம் என்ற அடிப்படையில் 1,800 சதுர அடி பரப்பளவுக்கு மட்டுமே வீடு கட்ட முடி யும். இதில் தன்னிடம் அபரிமிதமான நிதி வசதி இருக்கிறது என்பதற்காக, நான்கு மாடிகளுக்கு மேல் கட்டலாம் என்று அவர் இறங்கினால், அது விதி மீறலாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில், பல்வேறு கிராமங்களில் இன்றும், தங்களிடம் பட்டா உள்ளது என்பதையே ஆதாரமாக வைத்து, வீடு கட்டும் பணிகளில் மக்கள் ஈடுபடு கின்றனர். நகர், ஊரமைப்பு சட்டப்படி, அந்த நிலம் வீட்டு மனை யாக அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன் பின் வரைபட அனுமதி பெற வேண்டும் என்பதில் விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும்.

இது விஷயத்தில், அடிப்படை சட்ட நடைமுறைகள் என்ன என்பதையும், அதை எப்படி அணுக வேண்டும் என்பதையும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதில் அடிப்படை புரிதல் மக்களிடம் ஏற்பட்டால் மட்டுமே விதிமீறல் கட்டடங்களை தடுக்க முடியும் என் கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

Advertisement