செல்வாக்கை பயன்படுத்துங்கள், உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் கூறுங்கள்: சொல்கிறது அமெரிக்கா

1

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் உள்ள உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.



உக்ரைன், ரஷ்யா நாடுகள் இடையேயான போர் இன்னமும் ஓயவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் பேசிய பிரதமர் மோடி, அமைதி முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை வழங்கும் என்று கூறி இருந்தார்.


ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் தாம் பேசிய விவரத்தை, பிரதமர் மோடி தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த பதிவை மேற்கோள் காட்டி அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.


அதில், ரஷ்யாவிடம் உள்ள உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியா நிறுத்தலாம் என்று வலியுறுத்தி உள்ளார். அந்த பதிவில் லிண்ட்சே கிரஹாம் மேலும் கூறி உள்ளதாவது;


அமெரிக்கா இடையே உள்ள உறவுகளை மேம்படுத்த இந்தியா செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, உக்ரைனில் நடக்கும் இந்த ரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டிரம்பிற்கு உதவுவது தான் ஆகும்.


2வது பெரியநாடான இந்தியா புடினின் மலிவான எண்ணெய்யை வாங்குகிறது. புடினிடம் சமீபத்தில் பேசிய தொலைபேசி அழைப்பில், உக்ரைனில் நடக்கும் போரை நியாயமாகவும், மரியாதையாகவும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார் என நம்புகிறேன்.


இந்த விஷயத்தில் இந்தியா செல்வாக்கு செலுத்துகிறது என நான் எப்போதும் நம்புகிறேன், அவர்கள் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.


இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.

Advertisement