நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா: 2030க்குள் முடிக்க திட்டம்

2

வாஷிங்டன்: நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் முயற்சிகளில் நாசா ஆராய்ச்சி மையம் இறங்கி உள்ளது.



நிலவை மனிதர்கள் வாழ்விடமாக மாற்ற வேண்டும், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தரமான தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.


அதன் ஒரு அம்சமாக, நிலவில் 2030ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை நாசா விரைவுப்படுத்தி உள்ளது. இந்த விவரத்தை அந்நாட்டில் இருந்து வெளியாகும் பொலிடிகோ என்ற ஊடகம் வெளியிட்டு உள்ளது.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


அதில், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் அமெரிக்காவை போன்று நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம் வைத்து இருப்பதாக நாசாவின் தற்காலிக தலைவரும், அமைச்சருமான ஷான் டபி கூறி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


மேலும் மற்ற நாடுகளுக்கு முன்னதாக அமெரிக்கா அணுமின் நிலையத்தை அமைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அமெரிக்காவின் இந்த எண்ணம் எப்படி செயல்வடிவம் பெறும் என்பது தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறி உள்ளனர். காரணம் நாசாவின் 2026ம் ஆண்டு பட்ஜெட்டில் 24 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Advertisement