மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்

1

கடலுார்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18வது மாநில மாநாடு கடலுார் தனியார் திரு மண மண்டபத்தில் நேற்று துவங்கியது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செய லாளர் ரவிச்சந்திரன் அஞ் சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் அம்பிகாபதி வரவேற்றார்.

சி.ஐ.டி.யு., அகில இந்திய துணைத் தலைவர் பத்மநாபன், மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாலை பிரதிநிதி கள் மாநாடு நடந்தது. மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வேலை அறிக்கையையும். பொருளாளர் வெங்கடேசன், குடும்ப நல பாது காப்பு திட்ட பொருளா ளர் பரந்தாமன் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். மாநாட்டில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நினைவு சுடர்எடுத்து வரப்பட்டது. மாநாடு நாளை 10ம் தேதி வரை நாட்கள் நடக்கிறது

Advertisement