வீட்டுக்கடனை முன்கூட்டியே முடிக்கும் போது ஏற்படும் பிரச்னைகள் என்ன?

சொ ந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போரில் பலருக்கும் அதற்கு தேவையான நிதியை மொத்தமாக திரட் டுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இதற்கு வங்கிகளின் வீட்டுக்கடன் திட்டங்கள் தான் பேருதவியாக அமைந்துள்ளன.
இதில் சில ஆண்டு களுக்கு முன் வரை, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வீட்டுக்கடன் கிடைக்குமா என்ற கேள்வியுடன் தான் இருந்தனர். இது விஷயத்தில், மத்திய அரசு எடுத்த சில அதிரடி முடிவுகளால் பொதுத்துறை மற்றம் தனியார் வங்கிகள் மக்களை தேடிபிடித்து வீட்டுக்கடன் கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது.
இருப்பினும், தங்களின் வீட்டுக்கடன் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றனர். இதற்காக, வங்கிகள் என்ன நிபந்தனை விதித்தாலும் மறுக்காமல் ஏற்க மக்கள் முன்வருகின்றனர்.
இன்றைய சூழலில், அரசு பணி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணி புரி வோருக்கு ஊதிய உயர்வு கிடுகிடுவென ஏற்படுகிறது. இதனால், வீட்டுக்கடன் கணக்கை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்கு முன் முடிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
இது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியபின், சில ஆண்டுகள் கழித்து வேறு வங்கியில் அதே சொத்துக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கன் பெற முடியும் என்று தெரிய வருகிறது. இதனால், வீட்டுக்கடன் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றவும் மக்கள் விரும்புகின்றனர்.
இத்தகைய சூழலில், வீட்டுக்கடன் கணக்கை எப்போது, எப்படி முடிப்பது என்பதற்கான வழிமுறைகளை சரியாக அறிந்து செயல்பட வேண்டும். உதாரணமாக, உங்கள் வீட்டுக்கடன் கணக்கில், 40 மாத தவணைகள் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் போது, முன்கூட்டியே அதை முடிக்க நீங்கள் திட்டமிடலாம்.
இத்தகைய சூழலில், கணக்கை முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதற்கான அறிக்கையை வங்கியிடம் கேட்டு பெறலாம். இதில், நீங்கள் எப்போது கடன் கணக்கை முடிக்க முன் வந்தாலும் அப்போதைய நிலுவை அசல் தொகையை மட்டுமே வங்கிகள் வசூலிக்க வேண்டும்.
ஆனால், சில வங்கிகள் எஞ்சிய மாத தவ ணைகளை முழுமையாக செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களை நிர்பந்திக்கின்றன. எஞ்சிய அசல் தொகையை மட்டும் செலுத்துவேன், எஞ்சிய மாதங்களுக்கான வட்டியை செலுத்த முடியாது என்று நீங்கள் உறுதியாக தெரிவிக்கலாம்.
இது விஷயத்தில் வங்கிகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு வழி முறைகள் இல்லை என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
மேலும்
-
செல்வாக்கை பயன்படுத்துங்கள், உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் கூறுங்கள்: சொல்கிறது அமெரிக்கா
-
மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்
-
தங்கத்தின் விலையில் மீண்டும் இன்று மாற்றம்: சவரன் ரூ.200 குறைவு
-
கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்; தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்!
-
9வது நாளை எட்டிய ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம்
-
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா: 2030க்குள் முடிக்க திட்டம்