கட்டடங்களில் காற்றோட்ட வசதியை உறுதிப்படுத்த புதிய வழிமுறைகள்!

சொ ந்தமாக வீடு கட்டும் போது அதில் நல்ல காற்றோட்ட வசதிகள் செய்ய வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். ஆனால், நிலத்தின் அமைப்பு, கட்டுமான செலவு போன்ற காரணங் களால் இதில் சிலர் சமரசம் செய்து கொள்வதால் காற்றோட்ட வசதிகள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, வீடு கட்டும் போது அதில் எந்தெந்த இடங்களில் ஜன்னல் அமைந்தால் முறையான காற்றோட்ட வசதி கிடைக்கும் என்பதை வரைபடம் தயாரிக்கும் போதே திட்டமிட வேண்டும். நீங்கள் வாங்கிய நிலம் அமைந்துள்ள பகுதியில் எப்போது எந்த திசையில் காற்று வீசும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும்.
பொதுவாக ஒரு நிலத்தில் கட்டடம் கட்டும் முன் அங்கு இயல்பாக எந்த திசையில் இருந்து காற்று வீசும் என்பதை அறிய வேண்டும். உள்ளூர் மக்களிடம் விசாரிப்பது, பிற கட்டடங்களின் அமைப்பு போன்ற வழிகள் வாயிலாக இந்த விபரத்தை அறிந்து அதற்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்கலாம்.
பெரும்பாலான பகுதிகளில் காற்றின் போக்கு தெரியாமல் கட்டடம் கட்டிவிட்டு, காற்றோட்டம் இல்லை என புலம்பகூடாது. பொதுவாக கட்டடங்களை வடிவ மைக்கும் போது சிறப்பாக காற்றோட்டம் இருக்க, 'கிராஸ் வென்டிலேஷன்' என்ற முறையில் ஜன்னல்களை அமைக்க வேண்டும்.
இதன்படி, கட்டடங்களில் ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து வரும் காற்று எவ்வித தடங்கலும் இன்றி மறு திசையில் வெளியேறுவதற்கான வழி இருக்க வேண்டும். இவ்வாறு காற்று வந்து செல்லும் வழி எவ்வித குழப்பம் இன்றி சீரான முறையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஜன்னல்கள், கதவுகளை அமைப்பது தான் 'கிராஸ் வென்டிலேஷன்' என்று கூறப்படுகிறது.
வீடு கட்டும் போது ஒவ்வொரு அறைக்கும் என்று தனித்தனியாக 'கிராஸ் வென்டிலேஷன்' அமைப்பது சரியான வழிமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது. அதே நேரத்தில், வரவேற்பு அறைக்குள் வரும் காற்று இன்னொரு அறை வழியாக வெளியேறும் வகையில் வடிவமைத்தாலும் சரி தான்.
இந்த வகையில் வெளியில் இருந்து வரும் காற்று எவ்வித தடையும் இன்றி வெளியேறும் போது, வீட்டுக்குள் எப்போதும் புதிய காற்று இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் இதனால், அங்கு வசிப்போருக்கு எப்போதும் நல்ல காற்று கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
நீங்கள் எந்த அளவில் வீடு கட்டுவதாக இருந்தாலும் அதில் காற்றோட்டத்துக்கான வழிமுறைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நல்ல காற்று வர வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல், உள்ளே இருந்து காற்று வெளியேறுவதற்கான 'கிராஸ் வென்டி லேஷன்' வழிகளையும் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
மேலும்
-
செல்வாக்கை பயன்படுத்துங்கள், உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் கூறுங்கள்: சொல்கிறது அமெரிக்கா
-
மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்
-
தங்கத்தின் விலையில் மீண்டும் இன்று மாற்றம்: சவரன் ரூ.200 குறைவு
-
கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்; தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்!
-
9வது நாளை எட்டிய ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம்
-
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா: 2030க்குள் முடிக்க திட்டம்