கருவூல கணக்குத்துறை ஓய்வு அலுவலர்கள் கூட்டம்

மதுரை: மதுரை கருவூல கணக்குத்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க வருடாந்திர கூட்டம், மருத்துவ முகாம் நடந்தது.

சங்க தலைவர் அய்யம்பெருமாள் பேசியதாவது:

அலுவலக நாட்களில் ஓய்வூதியர்கள் உயிருடன் உள்ளதற்கான சான்று சமர்ப்பிக்க செல்லும் போது மதுரை மாவட்ட கருவூல அலுவலகத்தில் இடவசதி இல்லை.

கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள செய்தி தொடர்புத்துறை நுாலக தென்புறம் காலியிடத்தில் புதிய கட்டடமும், சங்கத்திற்கு தனி கட்டடமும் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். அரசு மருத்துவமனையில் ஓய்வூதியர்களுக்கு தனி அறையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திட வேண்டும் என்றார்.

சங்க செயலாளர் பிச்சை, துணைத்தலைவர் வீரணன், உதவி செயலாளர் அப்பாஸ் அலி, செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement