சுங்கச்சாவடியில் பா.ம.க., வினர் போராட்டம்

சோழவரம் : வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில், கடந்த 10ம் தேதி, பூம்புகாரில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு நடந்தது.

மாநாட்டிற்கு சென்று விட்டு, நள்ளிரவு திரும்பும்போது, சென்னை- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த மறுத்த நிலையில், ஊழியர்களை தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரவிராஜ் தலைமையில், அக்கட்சியினர், சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement