வக்கீல்கள் சம்பளம் உயர்கிறது: கேரளா அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு வக்கீல்கள் சம்பளத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசு வக்கீல்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கப்பட முடிவு எடுக்கப்பட்டது.

முதல்வர் வெளியிட்டு உள்ள உத்தரவின்படி, அரசு வக்கீல்களுக்கான சம்பளம் ரூ.87,500-ல் இருந்து ரூ.1.10 லட்சம் ஆகவும், அரசு கூடுதல் வக்கீல்களுக்கு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.95 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு நிபா மூளைகாய்ச்சலால் ஒரு ஆண்டிற்கும் மேலாக பாதிக்கப்பட்டு உள்ள சுகாதாரப்பணியாளர் டிட்டோ தாமஸ்-க்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 17 லட்சம் ரூபாய் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Advertisement