இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்: எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு

புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன.
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் ஆகியோர் பங்கேற்றனர். இச்சூழ்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இம்மாநாட்டில், அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார். பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் பார்லிமென்டில் கூறுகையில், சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், ஹிமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
2,800 நாய்களை கொன்றேன்: சிறை செல்ல தயார் என்கிறார் மஜத தலைவர்
-
ஜம்மு காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்; இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
-
இந்தியாவுக்கு 200 மெகாவாட் கூடுதல் மின்சாரம்: நேபாளம் முடிவு
-
பிரியங்கா செய்தது பிடிக்கவில்லை: சொல்கிறார் மின்டா தேவி
-
உலக விளையாட்டு செய்திகள்
-
தூய்மைப் பணியாளர்களை சந்திப்பதை தடுக்க முயன்ற போலீசார் தமிழிசை கோபம்