சிறுமியிடம் அத்துமீறல் இருவருக்கு வலை
திருமங்கலம், ஆக. 13--
இயற்கை உபாதை கழிக்க, அதிகாலை கழிப்பறைக்கு சென்ற சிறுமியிடம் அத்துமீற முயன்ற, இருவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இயற்கை உபாதைக்காக, வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு நேற்று முன்தினம் அதிகாலை சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த வாலிபர்கள் இருவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, பெற்றோர் பதறியடித்து வெளியே வர, வாலிபர்கள் தப்பியோடியதாக தெரிகிறது. இது குறித்து திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு சான்றிதழுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: புரோக்கருடன் சிக்கினார் விஏஓ
-
டூ வீலர் மீது கார் மோதிய விபத்து: குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
-
இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்: எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு
-
வெற்றியின் அடையாளம் அழகல்ல - தனித்துவமே...
-
வக்கீல்கள் சம்பளம் உயர்கிறது: கேரளா அரசு அறிவிப்பு
-
உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்கிறார் ராகுல்
Advertisement
Advertisement