சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டம்

சிதம்பரம் : சிதம்பரம் உட்கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுக்காவில் 200க் கும் மேற்பட்ட வி.ஏ. ஓ.,க் கள் உள்ளனர். நேற்று முன்தினம், சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், வி.ஏ.ஓ., க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், காலை முதல் மாலை 5:30 மணி வரை வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகத்தி ல் இருக்க வேண்டும். பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்து .
இதனை கண்டித்து தமிழ்நாடு'கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, சப் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, சப் கலெக்டர் அலுவலகம் முன்பு, '200க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் 'குவிந்தனர். நிர்வாகிகள் அலெக்சாண்டர், 'ஜான் போஸ்கோ, விஸ்வநாதன், கார்த்திகேயன், பக்ரிசாமி, ரவி, பாரதி தாசன் உட்பட 10 பேர், சப் கலெக்டர் கிஷன்குமார் அறைக்கு சென்றனர்.
உள்ளே செல்ல 6 பேருக்கு மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டதால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., க்கள் அனைவரும் வெளியே வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் வி.ஏ.ஓ.,க்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உள்ளே அழைத்தனர். சப் கலெக்டர் அழைத்தால்தான் உள்ளே வருவோம் எனக் கூறினர்.
இதனால், சப் கலெக்டர் தனது உதவியாளர் மூலமாக வி.ஏ.ஓ.,க்களுக்கு அழைப்பு விடுத்தார். பின், கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளித்து விட்டு சென்றனர்.
மேலும்
-
வாரிசு சான்றிதழுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: புரோக்கருடன் சிக்கினார் விஏஓ
-
டூ வீலர் மீது கார் மோதிய விபத்து: குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
-
இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்: எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு
-
வெற்றியின் அடையாளம் அழகல்ல - தனித்துவமே...
-
வக்கீல்கள் சம்பளம் உயர்கிறது: கேரளா அரசு அறிவிப்பு
-
உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்கிறார் ராகுல்