ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'

'ஹோ ண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், 'ஷைன் 100 டி.எக்ஸ்.,' என்ற புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. சாதாரண மாடல் 'ஷைன் 100 சி.சி.,' பைக்கை விட, இதில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதாவது, 17 அங்குல சக்கரங்கள், டியூப்லெஸ் டயர்கள், 'ப்ரீலோட்' அட்ஜஸ்ட்டபிள் பின்புற சஸ்பென்ஷன்கள், புதிய எல்.சி.டி., டிஸ்ப்ளே, சைட் ஸ்டாண்ட் பவர் கட் ஆப் வசதி ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் டிஸ்க் பிரேக் வருவதில்லை.
ஹெட்லைட், ஹெண்டல் பார் மற்றும் சைலென்சரில் குரோம் அலங்காரங்கள், புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற கிராபிக்ஸ், ஒரு லிட்டர் அதிகரிக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் ஆகியவை டிசைன் மாற்றங்கள். கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 எம்.எம்., பெட்ரோல் டேங்க் 10 லிட்டராக உள்ளது.
பைக்கின் இன்ஜின், 4 - ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் இயந்திர அளவில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக், நான்கு நிறங்களில் கிடைக்கிறது.