மேக்னைட் 'கருப்பு எடிஷன்'

'நிஸான்' நிறுவனம், 'மேக்னைட் கூரோ எடிஷன்' என்ற கருப்பு எடிஷன் காரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. உயர்ந்த மாடலுக்கு கீழ் உள்ள 'என் - கனெக்டா' மாடலை அடிப்படையாக கொண்டு இந்த கார் வந்துள்ளது. இதன் விலை, 34,000 ரூபாய் அதிகம். 11,000 ரூபாய் செலுத்தி, இந்த காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முறை, இந்த கார் 1 லிட்டர், டர்போ மற்றும் என்.ஏ., இன்ஜினில் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ்கள் கிடைக்கின்றன.
டிசைன் பொறுத்த அளவில், முன்புற கிரில், பம்பர்கள், 16 அங்குல அலாய் சக்கரங்கள், கேபின், சீட்கள் உட்பட காரின் இதர பாகங்கள் அனைத்தும் முழு கருப்பு நிறத்தில் வருகின்றன. ஒயர்லெஸ் சார்ஜிங், டேஷ் கேம் கூடுதல் அம்சங்களாக கிடைகின்றன.
எல்.இ.டி., லைட்டுகள், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வருவதில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement