கம்யூனிஸ்ட்டுகளை புறக்கணித்தது இல்லை: ஸ்டாலின்

சென்னை: கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நேற்று சென்னையில் முப்பெரும் விழா நடந்தது.


விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சியுடன் இருக்கும் நட்பு, தேர்தலுக்கான நட்பு அல்ல. அரசியலில் லாபம், நஷ்டம் பார்க்கும் நட்பு அல்ல.

நமக்குள் இருப்பது கொள்கை நட்பு; கோட்பாடு நட்பு; லட்சிய நட்பு. இது தான் பலரின் கண்களை உறுத்துகிறது. இங்கு யாரும், யாருக்கும் அடிமை அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்கிறேன்.

அவர்களின் எழுத்துக்களை படிக்கிறேன். அவர்கள் சுட்டிக்காட்டுவதில், உடன்பாடானது எது என அறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கிறேன். கூட்டணியில் இருக்கிறோம் என, அவர்கள் சுட்டிக்காட்டாமல் இருந்ததில்லை. அவர்கள் சுட்டிக்காட்டியதை நானும் புறக்கணித்தது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement