வாக்காளர் பட்டியல் குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்து திமுக தீர்மானம்

4

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஓட்டு திருட்டு நடைபெறுவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் குளறுபடியில் நடப்பதாகவும் திமுக மா.செ., கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னையில் திமுக மா.செ., கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியின் அடுத்த கட்ட நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் பின்வருமாறு:

* வாக்காளர் பட்டியலில் ஓட்டு திருட்டு நடைபெறுவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் குளறுபடியில் நடப்பதாகவும் கண்டித்து தீர்மானம்.

* திமுக வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் கமிஷன் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

* 'ஓரணியில் தமிழ்நாடு' முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய திமுகவினர் அனைவருக்கும் நன்றி.

Advertisement