ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
ப.வேலுார், ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதை தவிர்க்க, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து நாமக்கல், மோகனுார், தொட்டியம், முசிறி, சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து உள்ளது. மேலும், சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு செல்லும் வகையில் அரசு டவுன் பஸ் மற்றும் மினி பஸ் போக்குவரத்து உள்ளது. பஸ் ஸ்டாண்ட் வளாகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். பஸ் ஸ்டாண்ட் உள்ளே, விவசாயிகள் சங்கத்தின் பூ ஏல சந்தை உள்ளது.
இதனால், தினந்தோறும் விவசாயிகள் வந்து செல்லும் அவசியத்தில் உள்ளனர். காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதிகளவில் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு குறித்து, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம், சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தது. அப்போது, பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று, வெளியே வரும்போது ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தெரிந்தது. இதையடுத்து, பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றினர். தற்போது மீண்டும், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பொதுமக்கள் செல்லும் பாதை படிக்கட்டுகளை முழுவதுமாக ஆக்கிரமித்து பழக்கடை, ஓட்டல், டீக்கடை அமைத்து தார்ச்சாலை வரை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பஸ் வெளியே வரும்போது திரும்ப முடியாமல் டிரைவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், போக்குவரத்து நெரிசலால் இரண்டு பஸ்களுக்கு இடையே சிக்கி உயிர் பலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சுதந்திர தின விழா கொண்டாட்டம் 85 ஏரிகளில் தேசிய கொடியேற்றம்
-
காங்., 'மாஜி' ராஜண்ணாவுக்கு பா.ஜ., ஸ்ரீராமுலு அழைப்பு
-
உக்ரைன் விவகாரம்: டிரம்ப் - புடின் இன்று சந்திப்பு
-
ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்: புதிய கோணத்தில் விசாரணை துவக்கம்
-
ஆந்திராவில் 72 மணி நேரத்தில் கட்டட அனுமதி: தமிழகத்தில் மட்டும் 60 நாட்கள் இழுத்தடிப்பது ஏன்?
-
சொன்னீங்களே செஞ்சீங்களா: பா.ஜ., புது பிரசாரம்