பவன் ஷெராவத் புதிய கேப்டன்: தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு

சென்னை: தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு புதிய கேப்டனாக பவன் ஷெராவத் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில், வரும் ஆக. 29ல் புரோ கபடி லீக் 12வது சீசன் துவங்குகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இடம் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய கேப்டனாக 'ஆல்-ரவுண்டர்' பவன் ஷெராவத் அறிவிக்கப்பட்டார். கடந்த 9வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியால் அதிகபட்சமாக ரூ. 2.26 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், சமீபத்தில் முடிந்த 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 59.50 லட்சத்திற்கு ஒப்பந்தமானார். இவரது தலைமையிலான இந்திய அணி, தெற்காசிய விளையாட்டு (2019), ஆசிய சாம்பியன்ஷிப் (2023) போட்டியில் தங்கம் வென்றது. கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியை சாகர் ரதீ வழிநடத்தினார்.
துணை கேப்டனாக 'ரெய்டு மெஷின்' அர்ஜுன் தேஷ்வல் நியமிக்கப்பட்டார். உ.பி.,யை சேர்ந்த இவரை, ரூ. 1.405 கோடிக்கு வாங்கியது தமிழ் தலைவாஸ். தவிர இவர், ஆசிய விளையாட்டில் (2022) தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் சார்பில், 12வது சீசனுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 'ஜெர்சி' வழங்கப்பட்டது.
மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்