ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு:


குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையின் உள்பகுதியில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நூநாவுக்கு மேற்கு 60 கிமீ தொலைவிலும், பிரிஸ்பேனுக்கு வடக்கே 250 கிமீ தொலைவிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் அறியப்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடக்கே நியூ சவுத் வேல்சில் உள்ள ராக் ஹாம்ப்டன் வரையும், தெற்கு பகுதியில் க்ளென் இன்னெஸ் வரையும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதாக என்பதை உறுதிப்படுத்தும் வரை ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களிலும், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


நிலநடுக்கம் இருந்த போதிலும், உயிரிழப்புகள் அல்லது வேறு ஏதேனும் சேதாரங்கள் இருந்ததா என்பது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. சுனாமி ஆபத்து எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement