உணவு டெலிவரி முகவர் இறப்பு: மேற்குவங்க போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் உணவு வநியோக சிறுவன் இறந்ததை கண்டித்து போராட்டம் நடத்திய கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவின் சால்ட் லேக்-கெஷ்டோபூர் பகுதியில் இன்று நடந்த சாலை விபத்தில் உணவு டெலிவரி முகவர் ஒருவர் உயிரிழந்தார்,
கெஷ்டோபூர் மற்றும் சால்ட் லேக் இடையே உள்ள 8வது நடைபாதை பாலம் அருகே இந்த விபத்து நடந்தது. இது சம்பவத்தில் போலீசாரின் அலட்சியத்தை கண்டித்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனிடையே போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இது குறித்து பிதான்நகர் துணை ஆணையர் அனீஷ் சர்க்கார் கூறியதாவது:
இன்று, வேகமாக வந்த கார் மற்ற வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் இந்த மோதலில் கார் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் வந்தபோது, அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகின. மக்களை அமைதிப்படுத்த முயன்று வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டோம். இருப்பினும், பாலத்தின் மறுபுறம் சென்ற பிறகு, அவர்கள் எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர், அதன் பிறகு கூட்டத்தைக் கலைக்க நாங்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினோம்.
காரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.விபத்துக்கான காரணம் மற்றும் டெலிவரி முகவரின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து சால்ட் லேக் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அனீஷ் சர்க்கார் கூறினார்.
மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்