ஜம்மு காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்; இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது, வெடிபொருட்கள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து, பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேஷன் மகாதேவ், ஆபரேஷன் அகல் என பல்வேறு பெயர்களில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, குல்காம் வனப்பகுதியில் ஒரு துப்பாக்கி, வெடிபொருட்கள், கண்ணிவெடிகள் மற்றும் வெடிமருந்துகள் என ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவத்தினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள், நாய் ரோபோக்களுடன் இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் விதமாக, தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
