செஸ்: குகேஷ் ஏமாற்றம்

மிசவுரி: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் நான்காவது தொடர் அமெரிக்காவின் மிசவுரியில் நடக்கிறது. முதலில் ரேபிட் முறையில் போட்டி நடக்கின்றன. இதன் 4வது சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் ஷாம் ஷாக்லாந்தை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 62 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

பிரான்சின் மேக்சிம் வாசியருக்கு எதிரான 5வது சுற்று போட்டியை குகேஷ் 'டிரா' செய்தார். அடுத்து நடந்த 6வது சுற்றில் நாடிர்பெக்கிற்கு (உஸ்பெகிஸ்தான்) எதிராக மீண்டும் 'டிரா' செய்தார். 6 சுற்று முடிவில் 6.0 புள்ளி மட்டும் பெற்ற குகேஷ், 6வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் பேபியானோ (10.0), ஆரோனியன் (8), வெஸ்லே (8) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.

Advertisement