சுஷில் குமார் ஜாமின் ரத்து

புதுடில்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 42. ஒலிம்பிக்கில் 2008ல் வெண்கலம், 2012ல் வெள்ளி என இரு பதக்கம் வென்றவர். டில்லி சத்ராசல் மைதானத்தின் மல்யுத்த பயிற்சியாளராக இருந்த சாகர் தங்கர், கொலை வழக்கில் (2021, மே) சிக்கினார். சுஷில் குமார் உட்பட 17 பேர் 2022, அக்டோபர் மாதம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2023 ஜூலை மாதம் முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற, ஜாமினில் வந்தார். பின் மீண்டும் சிறை சென்றார். வழக்கு தொடர்பாக '186 அரசு சாட்சிகளில் 30 பேர் மட்டும் விசாரிக்கப்பட்டனர்,' என டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட சுஷில் குமார் கடந்த மார்ச் 4ல் மீண்டும் ஜாமினில் வந்தார்.
இதை எதிர்த்து சாகர் தங்கர் தந்தை அசோக் தங்கத், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, சஞ்சய் கரோல் அடங்கிய பெஞ்ச், சுஷில் குமார் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது. ஒருவாரத்தில் இவர் சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்