இந்திய பெண்கள் கலக்கல் வெற்றி * அரைசதம் விளாசினார் யஸ்திகா

பிரிஸ்பேன்: முதல் ஒருநாள் போட்டியில் யஸ்திகா அரைசதம் கைகொடுக்க, இந்திய பெண்கள் 'ஏ' அணி, ஆஸ்திரேலிய 'ஏ' அணியை 3 விக்கெட்டில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் 'ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி தஹ்லியா, பேட்டிங் தேர்வு செய்தார்.
ராதா அபாரம்
ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு அலிசா (14), வில்சன் (7) ஜோடி துவக்கம் கொடுத்தது. தஹ்லியா (9) ஏமாற்ற, ராச்செல் 51 ரன் எடுத்தார். நிக்கோல் (18) நிலைக்கவில்லை. மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. ஆஸ்திரேலிய ஏ அணி 47.5 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 90 பந்தில் 92 ரன் எடுத்த அனிகா அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் கேப்டன் ராதா, 3 விக்கெட் சாய்த்தார்.
யஸ்திகா அரைசதம்
இந்திய ஏ அணிக்கு யஸ்திகா, ஷைபாலி (36) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. தாரா 31 ரன் எடுத்தார். யஸ்திகா 59 ரன் எடுத்து கைகொடுத்தார். தேஜல் (8), தனுஸ்ரீ (3), கைவிட்டனர். ராதா 19 ரன் எடுக்க, இந்தியா ஏ வெற்றி எளிதானது. 42 ஓவரில் இந்திய ஏ அணி 215/7 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ராகவி (25), பிரேமா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
தொடரில் இந்தியா ஏ 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நாளை பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.
மேலும்
-
ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை
-
போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
-
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
அ.தி.மு.க., ஆட்சியில் 'டெண்டர்' முறைகேடு; லஞ்ச ஒழிப்பு துறை விளக்கம் அளிக்க உத்தரவு
-
ஆஸி.யை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
-
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்