சொன்னீங்களே செஞ்சீங்களா: பா.ஜ., புது பிரசாரம்

சென்னை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி, 'சொன்னீங்களே, செஞ்சீங்களா' என்ற பிரசாரத்தை, தமிழக பா.ஜ., துவக்கியுள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
நிறைவேற்றப்படாத தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி, 'சொன்னீங்களே, செஞ்சீங்களா' என்ற கேள்வி தொடரை, என் சமூக வலைதள பக்கத்தில் துவக்கி இருக்கிறேன். 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் மார்தட்து போன முக்கியமான, 100 தேர்தல் வாக்குறுதிகளை, மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இத்தொடரின் பிள்ளையார் சுழியாக, இன்று வரை நிறைவேற்றப்படாத ஒரு வாக்குறுதியை முன்வைத்து துவக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி எண், 285ல், 'ஊராட்சிகள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படும்' என, கூறப்பட்டு உள்ளது.
விரைவில் மற்றொரு காற்றில் பறந்த வாக்குறுதி வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெருங்கோட்டங்களில்
பூத் கமிட்டி மாநாடு
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அமைப்பு ரீதியாக பா.ஜ.,வின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணி நடக்கிறது. தமிழகம் முழுதும் உள்ள, 68,467 பூத்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
எட்டு பெருங்கோட்டங்கள் வாயிலாக, பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும். அவர்கள், தேர்தல் பணிகளை இன்று முதல் தேர்தல் வரை செய்ய உள்ளனர். அதன் அடிப்படையில், திருநெல்வேலியில் வரும், 17ம் தேதி மாநாடு நடக்க உள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுதும் எட்டு பெருங்கோட்டங்களிலும் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்படும்.
- நாராயணன் திருப்பதி, செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,
மேலும்
-
பஞ்சாப்பில் பயங்கரவாத சதிச் செயல் முறியடிப்பு; பாக்., பயங்கரவாதிகள் இருவர் கைது
-
நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
-
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள்... பிரதமர் மோடி உடன் பங்கேற்பு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது
-
இந்திராவை எதிர்த்ததால் ஆட்சியை இழந்த கருணாநிதி