காங்., 'மாஜி' ராஜண்ணாவுக்கு பா.ஜ., ஸ்ரீராமுலு அழைப்பு

துமகூரு: அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராஜண்ணாவை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு சந்தித்து பேசினார். பா.ஜ.,வில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான மதுகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜண்ணா கூட்டுறவு அமைச்சராக இருந்தார். ஓட்டு திருட்டு விவகாரத்தில் ராகுலை விமர்சித்து பேசியதால், கட்சி மேலிடம் உத்தரவின்படி, அமைச்சரவையில் இருந்து ராஜண்ணா நீக்கப்பட்டார்.
துமகூரில் உள்ள தன் வீட்டில் முகாமிட்டு உள்ளார். ராஜண்ணாவை, எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார்.
உண்மையை பேசியதற்காக அமைச்சர் பதவியில் இருந்து உங்களை நீக்கியது சரியல்ல. மொத்த எஸ்.டி., சமூகமும் உங்கள் பின் உள்ளது. நீங்களும், உங்கள் மகன் ராஜேந்திராவும் பா.ஜ.,வில் இணையுங்கள். நான், ராஜு கவுடா, சிவன கவுடா மற்றும், பா.ஜ.,வில் உள்ள நம் சமூக தலைவர்கள், உங்களை வரவேற்க தயாராக உள்ளோம்.
எங்களை விட உங்களுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று ராஜண்ணாவிடம், ஸ்ரீராமுலு கூறி உள்ளார். ஆனால் பா.ஜ.,வில் இணைவது பற்றி, ராஜண்ணாவிடம் இருந்து எந்த சாதகமான பதிலும், ஸ்ரீராமுலுவுக்கு கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் உசேன் நேற்று அளித்த பேட்டி:
ராஜண்ணா எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் மீது எங்களுக்கு நிறைய மரியாதை உள்ளது. கூட்டுறவு துறையில் அபார அனுபவம் கொண்டவர். பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக உழைத்துள்ளார். காங்கிரசில் இருந்து வெளியேறி, வேறு கட்சிக்கு அவர் செல்ல மாட்டார்.
ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது, கட்சி மேலிடத்தின் முடிவு. இதில், மாநில தலைவர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. காங்கிரஸ் ஒழுக்கமான கட்சி. மேலிடம் எடுக்கும் முடிவுக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும். ஓட்டு திருட்டுக்கு எதிராக ராகுல் நடத்தும் போராட்டத்திற்கு, நாம் அனைவரும் வலுசேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பஞ்சாப்பில் பயங்கரவாத சதிச் செயல் முறியடிப்பு; பாக்., பயங்கரவாதிகள் இருவர் கைது
-
நாய்க்கடியும் இருக்கக்கூடாது; நாயை கொல்லவும் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
-
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள்... பிரதமர் மோடி உடன் பங்கேற்பு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது
-
இந்திராவை எதிர்த்ததால் ஆட்சியை இழந்த கருணாநிதி